வெளிநாட்டவர்களுக்கெதிரான தண்டனைகளை இறுக்கும் நோர்வே!

You are currently viewing வெளிநாட்டவர்களுக்கெதிரான தண்டனைகளை இறுக்கும்  நோர்வே!

தண்டனைக்குரிய குற்றங்களுக்காக நோர்வேயை விட்டு வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்கள், நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களுக்கு இரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமென நோர்வே நீதித்துறை அறிவித்துள்ளது.

30.04.21 லிருந்து அமுலுக்கு வரும் புதிய சட்ட விதியை நோர்வே நாடாளுமன்றம் அங்கீகரித்திருப்பதோடு, நாட்டைவிட்டு வெளியேற்றும் அளவுக்கு பாரதூரமான குற்றங்களை புரிபவர்கள், நோர்வேயை விட்டு குறித்த காலக்கெடுவுக்குள் வெளியேறாமல் இருந்தால், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாக கருதப்படுவதோடு, இரு வருட சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வருமெனவும் நீதியமைச்சர் “Monica Mæland” அம்மையார் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply