வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் : மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்!

  • Post author:
You are currently viewing வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் : மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்!

பிருத்தானியாவில் ஊரடங்கை தளர்த்த பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab) வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab) தெரிவித்திருந்தார். இதனிடையே மருத்துவமனையில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகளை இங்கிலாந்து பதிவு செய்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 13,729 ஆக உயர்ந்துள்ளது.

வெளியுறவு செயலாளர் “Dominic Raab” கூறியதாவது:-

நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியால் நல்ல பலன் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்.

இப்போது நடவடிக்கைகளை தளர்த்துவது பொது சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னர் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் “Dominic Raab” கூறியுள்ளார்.

பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் வருமாறு:-

தினசரி இறப்பு விகிதத்தில் ஒரு நீடித்த மற்றும் நிலையான வீழ்ச்சி. நிர்வகிக்கக்கூடிய நிலைகளுக்கு குறைந்து வரும் நோய்த்தொற்றின் வீதத்தைக் காட்டும் நம்பகமான புள்ளிவிவரம்.

சோதனைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்வது எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். எந்த மாற்றங்களும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் இருப்பது ஆகும்.

பகிர்ந்துகொள்ள