வெள்ளையருக்கே தலைமைப்பதவிகள்! கொதிக்கும் ஒஸ்லோவின் முன்னாள் பிரதி மேயர்!!

You are currently viewing வெள்ளையருக்கே தலைமைப்பதவிகள்! கொதிக்கும் ஒஸ்லோவின் முன்னாள் பிரதி மேயர்!!

நோர்வேயின் பிரபல கட்சியான “தொழிலாளர் கட்சி / Arbeiderpartiet” யில், அதன் தலைமை பொறுப்புக்களுக்கு வெள்ளையர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவதாகவும், கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை எனவும், அக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம் விசனம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் இளையோர் பிரிவில் தன்னை இணைத்து கொண்டதிலிருந்து தனது செயலாற்றலாலும், பேச்சாற்றலாலும், குறுகிய காலத்தில் கட்சியில் முக்கியத்துவம் பெற்ற கம்சாயினி, நோர்வேயின் தலைநகர் “Oslo” வின் பிரதி மேயராக பதவி வகித்திருந்ததோடு, கட்சியின் “Oslo” பிரிவின் உபதலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

கட்சியின் “Oslo” பிரிவின் நிர்வாகக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து, இதுவரை தான் வகித்து வந்த, கட்சியின் “Oslo” பிரிவின் உபதலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள கம்சாயினி, தொழிலாளர் கட்சியின் தலைமை பொறுப்புக்களை வெள்ளையர்கள் மாத்திரமே நியமிக்கப்படுகிறார்கள் எனவும், கட்சியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினருக்கு அந்த வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் பிரபல தொலைக்காட்சியான “TV2” இருக்கு வழங்கிய நேர்காணலொன்றில் இவ்விடயங்களை வெளிப்படுத்தியிருக்கும் கம்சாயினி, கட்சியில் நீண்டகால உறுப்பினர்களுக்கும், செயல்திறன் கொண்டவர்களுக்கும், குறிப்பாக இளையவர்களுக்கும் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என கருதுவதாகவும், எனினும் கட்சியில் வெள்ளையர்கள் மாத்திரமே முன்னிலைக்கு கொண்டுவரப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தொலைக்காட்சியான “TV2” தெரிவிக்கும்போது, மேற்படி விடயம் குறித்து கட்சி வட்டாரங்களோடு தான் பேசியபோது, கட்சி விடயங்களில் கம்சாயினியின் நகர்வுகள், கட்சியின் நம்பிக்கையை பெறுவதற்கு மாறாக, அவரது நகர்வுகள் புரிந்துகொள்ளப்பட முடியாதவையாகவும், பைத்தியக்காரத்தனமானதுமாக இருந்தமையால், கட்சியில் பலரது கோபத்துக்கு கம்சாயினி ஆளாகியிருந்தமையால், மீண்டுமொருமுறை அவர் கட்சியின் நிர்வாகக்குழுவில் காத்திரமான பொறுப்பொன்றுக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நிலைமை இருக்கவில்லை  என அறிய முடிவதாக தெரிவிக்கிறது.

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply