வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு, சில உடல் பாகங்களை அகற்றி சடலங்களை முதலைகளுக்கு உணவாக வழங்கியமை விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை குற்ற விசாரணைப் பிரிவினர் தமக்கு அறியத் தந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி, பின்னர் குற்ற புலனாய்வு பிரிவில் இணைந்து கொண்ட நபர் இந்த உண்மைகளை மூடி மறைக்க உதவியுள்ளதாக ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.