வேலன் சுவாமிக்கு சிங்களத்தில் வந்த வழக்கு அறிவித்தல்!

You are currently viewing வேலன் சுவாமிக்கு சிங்களத்தில் வந்த வழக்கு அறிவித்தல்!

மொழி உரிமையை  சிறீலங்கா காவற்துறையினர் மீறுவதாக  வேலன் சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ‘வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி’ போராட்ட வழக்கு  இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

குறித்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினரால் கடந்த வருடம் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்  நிலையில்  ஸ்ரீலங்கா சிறீலங்கா காவற்துறையினர் சிங்கள மொழியில் இவ்வழக்கு அறிவித்தலை தனக்கு வழங்கியுள்ளமை  மொழியுரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply