உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று(19.10.2024) மாலை அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.