வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

You are currently viewing வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கிளிநொச்சி  இரணைமடு A9 சாலையில் கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற கார் ஒன்று, கிளிநொச்சி கனகாம்பிகை பகுதியில் பிரதான சாலைக்குள் நுழைந்த ஒரு மிதிவண்டியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று (24.04.2025) இரவு சுமார் 08 மணியளவில் சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 56 வயதான கந்தையா ஆறுமுகம் என்ற சைக்கிளை ஓட்டிச் சென்றவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், காரின் சாரதி கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply