வைத்தியசாலை பாதுகாவலருடன் முரண்பட்ட அர்ச்சுனா!

You are currently viewing வைத்தியசாலை பாதுகாவலருடன் முரண்பட்ட அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் பாதுகாவலருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த காவலர், தன்னை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்ததாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், பாதுகாவலரின் கையடக்க தொலைபேசியை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தன்னை எவ்வாறு காணொளி எடுக்க முடியும் எனவும் அர்ச்சுனா இதன்போது விவாதம் செய்துள்ளார்.

அத்துடன், குறித்த பாதுகாவலர் அந்த இடத்திலிருந்து செல்ல முற்பட்ட போது அர்ச்சுனா அவரை இடைமறிப்பதையும் காணொளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள், அண்மைய காலமாக பல சர்ச்சைகளையும் பொதுமக்கள் தரப்பில் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply