ஸ்பானியாவில் கிட்டத்தட்ட 10,000 சுகாதார ஊழியர்கள் குரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்பானியாவில் 28 வயதான சாரா பிராவோ லோபஸ்( Sara Bravo Lopez) கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றும் இவர் ஒரு இளம் வயது ஊழியர் என்றும், சுகாதார நிலையத்தில் குடும்ப மருத்துவர் என்றும் , மேலும் இவரது சக ஊழியர் ஒருவர் குரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அவசர அறையில் இருந்த வேளை அவரைக் கவனித்தவர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
மேலும் சாரா பிராவோ தன்னை அறியாமலே கொரோனா வைரசின் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பெற்றோர் தாத்தா,பாட்டி ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இவள் தான் வைத்தியராக வந்து எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணித்தவள் என்றும், உதவி செய்து கொண்டிருக்கும் போதே இறந்து விட்டாள் என்றும் இவளது குடும்பம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றும் சக பணியாளர்கள் கூறுகையில் இவள் சிறந்த தொழில் முறை மருத்துவரும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் நோயாளர்களை பார்தவர் என்றும் இவளது சிறந்த குணங்களை விவரித்துள்ளனர்.