மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு ஒன்று, மொராக்கோவிற்கு அருகே கவிழ்ந்ததில் 25 மாலி நாட்டவர்கள் உட்பட குறைந்தது 69 பேர் இறந்ததாக மாலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது குறித்த படகில் 80 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து, ஸ்பெயினை அடைய முயற்சித்த ஏதிலிகளின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
மாலியில், வேலையின்மை மற்றும் விவசாய சமூகங்கள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ளிட்ட சஹேல் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிலவும் மோதல்கள் காரணமாக அங்குள்ள மக்கள் ஸ்பெய்னில் அடைக்கம் கோரி வருகின்றனர்.
எனினும் அவர்கள் பயணிக்கும் மொரிட்டானியா மற்றும் மொரோக்கோவின் ஊடாக ஸ்பெயின் வரையாக கடற்பாதை உலகின் மிகவும் ஆபத்தான பாதையாகும்.
இந்தநிலையில்,2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெய்னை அடைய முயன்று கிட்டத்தட்ட 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக, இடம்பெயர்வு உரிமைகளுக்கான குழுவான வோக்கிங் போர்டர்ஸ் தெரிவித்துள்ளது.