ஸ்பெயின் அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு : 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு !

You are currently viewing ஸ்பெயின் அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு : 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு !

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி பயணப்பட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி பயணப்பட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஜனவரி 2 ஆம் திகதி மொரிட்டானியாவிலிருந்து 66 பாகிஸ்தானியர்கள் உட்பட 86 புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட அந்த படகிலிருந்து 36 பேரை மொராக்கோ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நீரில் மூழ்கியதாகக் கருதப்படுபவர்களில் 44 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. 13 நாட்கள் பயணப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

சர்ச்சைக்குரிய மேற்கு சஹாரா பிராந்தியத்தின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளது, சில பாகிஸ்தானியர்கள் உட்பட உயிர் பிழைத்தவர்களில் பலர் தக்லா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவலில், விபத்தில் சிக்கிய படகில் 80 பயணிகள் பயணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் திகதியே தொடர்புடைய படகு குறித்து ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவை பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹெலிகொப்டர் சேவையை பயன்படுத்தி தேடுதல் நடத்தியுள்ளனர். ஆனால் பலனேதும் இல்லை என்றதும், அருகிலுள்ள கப்பல்களுக்கு இந்த விவகாரம் தொடர்பில் எச்சரித்துள்ளனர்.

காணாமல் போன படகு குறித்து ஆறு நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் அதிகாரிகளுக்கும் அகதிகள் தொண்டு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்திருந்தது.

அத்துடன் ஜனவரி 12 அன்று ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவைக்கும் படகு ஒன்று ஆபத்தில் இருப்பதாக அது எச்சரித்துள்ளது. 2024ல் ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட புலம்பெயர் மக்களில் 10,457 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியா 30 பேர்கள் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply