கோவிட் 19 இன் தாக்கத்தினால் பிரான்சு நாட்டின் அரச தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு மக்கள் உள்ளிருப்பினைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஆபத்தான சூழலில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் மக்கள் தம் வீடுகளில் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழீழ தேசத்திற்காகவும் எம் மக்களின் விடுதலைக்காகவும் தம் இன்னுயிர்களை உவந்தளித்த எம் மாவீரர்களை எம் மக்கள் தம் இல்லங்கள் தோறும் இன்று, நவம்பர் 27 ம் நாளில் அகவணக்கம் செலுத்தி நெய்விளக்கேற்றி வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.