தெற்கு லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று இஸ்ரேல் நடத்திய குறித்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்களை தாக்கியதாகக் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேலில் மூன்று தளங்களை இலக்கு கொண்டதாகவும் கூறபடுகின்றது.
இந்த தாக்குதல் இஸ்ரேலுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த வன்முறையில் மிக மோசமான தாக்குதல் என கூறப்படுகின்றது.
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது.
காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான மோதலும் தீவிரமடைந்துள்ளது.