ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 90 கொரோனா மரணங்கள் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொற்று நோயால் மொத்தம் 2769 பேர் இதுவரை ஸ்வீடனில் இறந்துள்ளனர்.
அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,721 ஆக உயர்ந்துள்ளது. 1572 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தொற்றுநோயியல் நிபுணர் “Anders Tegnell” ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஸ்வீடனில் தீவிர சிகிச்சை பெறும் எண்ணிக்கையைப் பார்க்கும்போது குறைந்து வரும் போக்கையே காணக்கூடியதாக உள்ளது என்றார்.
ஐரோப்பாவில் பொதுவாக ஒரு வகையான தளர்வு நிலை உள்ளது என்றும், உலகின் ஏனைய பகுதிகளில் கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கோவிட் -19 இன் மிக லேசான அறிகுறிகளை மட்டுமே ஒருவர் கொண்டிருக்க முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது எனவே ஒரு கூடுதல் நாள் வீட்டிலேயே இருங்கள்” என்று Anders Tegnell திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தகவல்: VG