ஹஜ் யாத்திரையில் 1301 பேர் மரணம்: சவுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

You are currently viewing ஹஜ் யாத்திரையில் 1301 பேர் மரணம்: சவுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையில் வெயிலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,301 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களில் 83 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹஜ் செய்ய வந்தவர்கள் என்றும், போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியில் நீண்ட தூரம் நடந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகவீனமடைந்த 95 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு, 22 நாடுகளில் இருந்து சுமார் 10 லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ்ஜுக்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கலந்து கொண்டனர்.

அதிக வெயில் மற்றும் அனல் காற்று வீசியதால், பக்தர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரும் மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இறப்புகள் பதிவான நாளில் அதிகபட்சமாக 125 டிகிரி பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மொத்தம் 1,75,000 இந்தியர்கள் ஹஜ்ஜுக்கு சென்றுள்ளனர். 98 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் உடல்நலக்குறைவு, வயது முதிர்வு போன்ற இயற்கை காரணங்களால் இறந்தது தெரியவந்தது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply