ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை !

You are currently viewing ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை !

தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஹஸ்ஸம் ஷாவான். இந்நிலையில், நேற்றிரவு நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் ராணுவம்  அறிவித்து உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் இருந்தபோது, ஷாவான் மீது தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளது. காசாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள பாலஸ்தீனியர்கள் இந்த பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், தெற்கு காசா முனை பகுதியில் இருந்து  இஸ்ரேல் சமூகத்தினரை நோக்கி ராக்கெட் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதனை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

எனினும், அந்த ராக்கெட் இடைமறித்து தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட காயங்கள் அல்லது பாதிப்புகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply