ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக, பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய கஜானாவுக்கான நிதிச்செயலர் Victoria Atkins, இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை, இன்று, செவ்வாய்க்கிழமை காலை, 9இலிருந்து 10ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
அவர்களில், இரண்டு பதின்மவயதினர், ஒரு ராணுவ வீரர், இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றவர்கள் மற்றும் இசை நிகழ்ச்சி பாதுகாவலர் ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்னமும் ஐந்து பேரைக் காணவில்லை. அவர்கள் நிலைமை என்ன என்றும் தெரியவில்லை.
இந்நிலையில், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்,ஹமாஸ் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு வலியுறுத்தியுள்ளார்.