ஹமாஸ் படைகள் திங்களன்று விடுவித்த இரு பணயக்கைதிகளில் ஒருவர் கனடாவில் வசிக்கும் இஸ்ரேலியரின் உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது. வான்கூவரில் வசிக்கும் Rutie Mizrahi தெரிவிக்கையில், அத்தையின் விடுதலையை அறிந்து நிம்மதியடைந்துள்ளதாகவும், ஆனால் தன் மாமாவைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருவரும் சம்பவத்தன்று ஹமாஸ் படைகளின் பிடியில் சிக்கியிருந்தனர். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலை அடுத்து, சுமார் 200 பேர்களை பணயக்கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.
பெரும்பாலும் இஸ்ரேலிய பொதுமக்கள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்களன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்துள்ள தகவலில், 85 வயதான Yocheved Lifshitz மற்றும் 79 வயதான Nurit Cooper ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் Rutie Mizrahi தெரிவிக்கையில், தமது அத்தை ஆரோக்கியமாகத் தான் காணப்படுகிறார் எனவும், காயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை என்றார். மேலும், ஹமாஸ் படைகளால் Lifshitz என்பவரின் குடியிருப்பானது தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.