காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியா அதை மறுத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாகக் கனடா மற்றும் இந்தியா மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவும் மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில் கனடா காவல்துறைத் தலைவர் மைக் டுஹெம், கனடாவின் அரசு செய்திச் சேனலான சி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் இந்தியா பெரிய அளவில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு உளவுத்துறைத் தகவல் மட்டுமல்ல, எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது,” என தெரிவித்துள்ளார்.