உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!உடல்கள் கண்டுபிடிப்பு!

You are currently viewing உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!உடல்கள் கண்டுபிடிப்பு!

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!உடல்கள் கண்டுபிடிப்பு! 1

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!உடல்கள் கண்டுபிடிப்பு! 2

 

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!உடல்கள் கண்டுபிடிப்பு! 3

இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிந்திக்கிடைத்த செய்திகளின் படி

ஈரான் உலங்கு வானூர்தி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.

கடினமான வானிலையிலும் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து உடல்களை மீட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments