ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அட்லாண்டிக் பெருங்கடலில் போர்க்கப்பல்களை பயிற்சிக்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளது. ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் பயிற்சி செய்து வருகின்றன. அவற்றில் புடினின் அதிநவீன போர்க்கப்பலான Admiral Gorshkovவும் ஒன்று.
இது ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாங்கி ஆகும். மேலும் அணுசக்தி நீர்மூழ்கி கஸான் மற்றும் இரண்டு கடற்படைக் கப்பல்களுடன் செல்கிறது என்றும், இந்தப் பயிற்சியில் 370 மைல்களுக்கு மேல் உள்ள இலக்குகளைத் தாக்குவதும் அடங்கும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், நான்கு கப்பல்களும் புதன்கிழமை ஹவானாவை வந்தடையும் என்றும், அவை அமெரிக்காவின் கடற்கரையில் இருந்து 25 மைல் தொலைவில் பயணிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடினின் போர்க்கப்பல்கள் இருக்கும் இடம் அமெரிக்காவிற்கும், பஹாமாஸுக்கும் இடையில் ஏறக்குறைய சமமான தொலைவில் உள்ள கடல் பகுதியை கண்காணித்து வருவதாக அமெரிக்க Boeing P-8 Poseidon கடல் ரோந்து மற்றும் உளவு விமானம் மூலம் OSINT ஆய்வாளர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கியூபா அதிகாரிகள் ரஷ்ய கப்பல்கள் அணு ஏவுகணைகளை சுமந்து செல்வதை மறுத்துள்ளனர். எவ்வாறாயினும், சமீபத்தில் தனது நேட்டோ எதிரிகளுக்கு நெருக்கமான நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு தனது சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்குவதாக விளாடிமிர் புடின் (Vladimir Putin) அச்சுறுத்தினார்.