இத்தாலியின் “கொரோனா” மரணங்கள் 10.000 ஆகியுள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
28.03.20 சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 10.023 மரணங்கள் பதிவாகியிருப்பதாகவும், நாடு முழுவதிலும் 92.472 பாதிப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இத்தாலிய அதிகாரிகள், ஒரே நாளில் 889 மரணங்களும், ஒரே நாளில் 6.000 மேலதிகமான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஜேர்மனிய விமானப்படைக்கு சொந்தமான “Air Bus A – 310” இரக அவசர உயிர்காப்பு (Ambulance) விமானம் இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 44 நோயாளிகளை ஒரே நேரத்தில் வைத்து சிகிச்சையளிக்கும் வசதிகளோடு வடிவமைக்கப்பட்ட இவ்விமானம், “கொரோனா” வால் மிகவும் பாதிக்கப்பட்ட இத்தாலியின் “Bergamo” பகுதியை சென்றடைந்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.