100 குழந்தைகள் உட்பட மழலையர் பள்ளி ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

  • Post author:
You are currently viewing 100 குழந்தைகள் உட்பட மழலையர் பள்ளி ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

Molde நகராட்சியில் உள்ள Eidsvåg மழலையர் பள்ளியில் ஒரு குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று Molde நகராட்சி ஊழியர்கள் புதன் இரவு கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இப்போது Kristiansund மருத்துவமனையில் குழந்தைகள் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று Romsdals budstikke தெரிவித்துள்ளது.

Molde நகராட்சி மருத்துவர் Cato Innerdal புதன்கிழமை மாலை செய்தித்தாள் ஒன்றிற்கு கூறுகையில், குழந்தை சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனையின் முடிவுகள் சற்று சாதகமானதாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முதல் சோதனை முடிவுகள் தெளிவாக இல்லை என்பதால், புதிய சோதனை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இறுதி உறுதிப் படுத்தலுக்காக காத்திருக்கின்றோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Molde யிலும், இரண்டு மழலையர் பள்ளிகள் மற்றும் ஒரு பள்ளி மூடப்பட்டுள்ளன என்று புதன் மாலை Molde நகராட்சியில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் / மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள