ஐரோப்பாவின் மிக முக்கிய அரசியல் மையங்களில் ஒன்றான பிரான்சு சிறாசுபுர்க் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மேற்கொள்வோர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டமும் அரசியற் சந்திப்புக்களும் இன்று 12/09/2022 நடத்தப்பட்டது.
கைகளிலே சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை (ICC) வேண்டும் எனும் கோரிக்கை மற்றும் இனவழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகள் பிடிக்கப்பட்டன. சமவேளையில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசனை அவை உறுப்பினர்கள் போன்றோரை சந்திக்கப்பட்டது. 51வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் (ICC) , தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என பிரான்சு நாடு தன் நிலைப்பாட்டினை நியாயமான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டன. தொடரும் இவ்வறவழிப்போராட்டம் எதிர்வரும் 14.09.2022 அன்று சுவிசு நாட்டின் எல்லையினை வந்தடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா
“ அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது “
-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்