11 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் ஒருவர் கைது !

You are currently viewing 11 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் ஒருவர் கைது !

மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் ஒருவரை நேற்று முன்தினம்  (29) இரவு முருங்கன் பகுதியில் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு பின்னர் கொழும்பு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த பீடி இலை மூடைகள் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முருங்கன் பகுதியில் வைத்து குறித்த வாகனம் சோதனையிடப்பட்டது.

இதன்போது 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 11 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 1200 கிலோ கிராம் பீடி இலை மூடைகள் மீட்கப்பட்டதுடன், களனியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். முருங்கன் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply