தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை ஊடறுத்து பிரான்சில் மனித நேய ஈருறுளிப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சம நேரத்தில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியவாறு 865Km கடந்து Strasbourg ல் அமைந்திருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தினை நோக்கி விரைகின்றது.
குறிப்பாக தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களும் நியாயமான அறவழிப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பெரும் எழிச்சியோடு தொடர்கின்றனர்.
இன்று காலை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் 9மணி முதல் 10 மணிவரை கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஆலோசனை அவை முன்றலிலும் கவனயீர்ப்பு போராட்டம் அரசியல் சந்திப்பும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து Strasbourg மாநகரசபையில் மனு கையளித்து மேலும் பல மாநகரசபையின் ஊடாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பிரான்சின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இடித்துரைக்க இருக்கின்றது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”