13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை சிறீலங்கா காவற்துறையினர் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே குழப்பநிலை ஏற்பட்டது.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாசங்கத்தினர் இன்று கோட்டை, பெரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.
பேரணியை சிறீலங்கா காவற்துறையினர் தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சில 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தினர்.
நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இருவரை சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.