13 நாடுகளில் பரவி வரும் கொடிய வைரஸ் தொற்று!

You are currently viewing 13 நாடுகளில் பரவி வரும் கொடிய வைரஸ் தொற்று!

ஆப்பிரிக்காவில் பரவிவரும் mpox தொற்றானது 13 நாடுகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கட்டுப்பாட்டை மீறி பரவக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையத்தின் (ஆப்பிரிக்கா CDC) நிபுணர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) இந்த ஆண்டு மட்டும் 13,700 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. அத்துடன் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிய விகாரம் முன்பு வந்ததை விட கொடியது மற்றும் ஆக்ரோஷமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இது புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR), கென்யா மற்றும் ருவாண்டா உட்பட மொத்தம் 13 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments