சிறீலங்கா அரசு மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களினால் நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகள், தமது உறவுகளுக்கு நீதி கேட்டு வவுனியாவில் 1399 நாட்கள் கடந்தும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர் தாயக சங்கத்தினரின் குறித்த போராட்டம் நாளை 18.12.2020 வெள்ளிக்கிழமை அன்று 1400 நாட்களை அண்மிக்கும் நிலையில் நாளை நடைபெறவிருந்த கவனவீர்ப்பு போராட்டத்துக்கு வவுனியா பொலிஸார் கொரோனா நோய்ப்பரவலை காரணம் காட்டி நிதிமன்ற தடை உத்தரவைப் பெற்று, சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரிடம் இன்று 17.12.2020 வியாழக்கிழமை கையளித்துள்ளனர்.
