இன்று 18/09/2022 ,
1500Km கடந்து ஐ.நா வந்தடைந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டத்தினை மேற்கொண்டவர்கள் நாளை நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு விடுக்கும் அறைகூவல் – காணொளி
2/09/2022 நெதர்லாந்தில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பெல்சியம், லக்சாம்பூர்க்,யேர்மனி,பிரான்சு நாடுகளை கடந்து சுவிசு நாட்டில் பயணித்தது. இன்று பி.ப ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் எழுச்சிமிக 1500Km கடந்து வந்தடைந்தது.
17 நாட்கள் இயற்கையோடு போராடி உயரிய இலட்சியத்திற்காக 25தடவையாக இப்போராட்டம் தொடர்வது முக்கிய குறிப்பாகும்.
சிறிலங்கா பேரினவாத அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே நிரந்த தீர்வு எனும் கோரிக்கையினை இடித்துரைத்து சர்வதேச சமூகம் மத்தியில் எம் விடுதலைச் செய்தியினை இப்போராட்டம் எதுவித சமரசமும் இன்றி எடுத்துச்செல்கின்றது. 51வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். எனவே நாளை (19/09/2022) ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) பி.ப 14:30 மணியளவில் நடைபெற இருக்கும் எழுச்சிக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொள்ளுங்கள். எங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள் என அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.”
- தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்