16 நாடுகளுக்கு பயணிக்க தடை விதித்த சவூதி அரேபியா!

You are currently viewing 16 நாடுகளுக்கு பயணிக்க தடை விதித்த சவூதி அரேபியா!

கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக பிரபல வளைகுடா நாடான சவூதி அரேபியா, இந்தியாவிற்கும், மேலும் 15 நாடுகளுக்கும் செல்ல அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. கோவிட்-19 தொற்று மீண்டும் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக தினசரி கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா தனது குடிமக்களை இந்தியா உட்பட மொத்தம் பதினாறு நாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.

இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு சவுதி அரேபியாவின் குடிமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவுதி அரேபியாவில் இதுவரை யாரும் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்படவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

அதேநேரம், குரங்கம்மை நோயை கண்காணிக்கவும் கண்டறியவும், புதிதாக ஏதேனும் தொற்று ஏற்பட்டால் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் அரசுக்கு திறன் உள்ளது என்று தடுப்பு சுகாதார துணை அமைச்சர் அப்துல்லா ஆசிரி கூறினார்.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தியுள்ளது என் அறிவித்துள்ளது. மேலும், குரங்கம்மை வைரஸ் வெடிப்பின் அளவு மற்றும் காரணத்தை நன்கு புரிந்துகொள்ள பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply