தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.


இன்று 24.02.2021 தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் ஐ.நா சபையில் விவாதிக்க இருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) உணவுத்தவிர்ப்பு போராட்டமானது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினையும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி 3ம் நாளாக விடுதலை ஓர்மத்தோடு தொடர்கின்றது.



