17 நாடுகளில் கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு

  • Post author:
You are currently viewing 17 நாடுகளில் கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர்  பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக  இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 65 விழுக்காடு இந்த பாதிப்பு பரவி உள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து, கொரோனா வைரசை தாங்கள் சரியாக கணிக்கத் தவறி விட்டோம் என்று உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவிற்கு வெளியே மொத்தம் 15 நாடுகளில்  தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்போடியா கொரோனா வியாதி பாதிப்பை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இலங்கையில் சீன நாட்டவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் சிகிச்சை பலனின்றி  மரணமடைந்துள்ளார். இதனிடையே இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங்: 8 பேர் பாதிப்பு, தாய்லாந்து: 8 பேர் பாதிப்பு, மக்காவோ: 5 பேர் பாதிப்பு, ஆஸ்திரேலியா: 5 பேர் பாதிப்பு, சிங்கப்பூர்: 5 பேர் பாதிப்பு, அமெரிக்கா: 5 பேர் பாதிப்பு (வாஷிங்டன், கலிபோர்னியா (2), அரிசோனா, இல்லினாய்ஸ்), மலேசியா: 4 பேர் பாதிப்பு, ஜப்பான்: 4 பேர் பாதிப்பு, தென் கொரியா: 4 பேர் பாதிப்பு, தைவான்: 4 பேர் பாதிப்பு, பிரான்ஸ்: 3 பேர் பாதிப்பு, வியட்நாம்: 2 பேர் பாதிப்பு, கனடா: 1 நபர் பாதிப்பு, ஜெர்மனி: 1 நபர் பாதிப்பு, நேபாளம்: 1 நபர் பாதிப்பு, இலங்கை: 2 நபர் பாதிப்பு.

பாதிக்கப்பட்டவர்களில் பலரும் தாங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரியாமல் இருக்கிறார்கள் எனவும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள