திருச்சியில் பதினோராம் வகுப்பு மாணவனை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாம் தேதி பதினோராம் வகுப்பு சிறுவன் ஒருவன் விளையாடுவதற்காக வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். மாணவன் குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர்.
இதனையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் மாணவன் பயிலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியயை சர்மிளா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அவரது செல்போன் எண்ணை கொண்டு அவர் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழி வீட்டிலிருந்த ஆசிரியை சர்மிளாவை காவல்த்துறையினர் கண்டுபிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பதினோராம் வகுப்பு மாணவனிடம் ஆசைவார்த்தை கூறி தாலிகட்ட வைத்ததுகேட்டு அதிர்ந்தனர். தஞ்சை கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக சர்மிளா கூறிய நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் மீட்கப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவன் காப்பகத்தில் சேர்க்கப்பட்டான்.