18 மாவட்டங்களில் தளர்ந்தது ஊரடங்கு! – வீதிகளில் மக்கள் நடமாட்டம்!

18 மாவட்டங்களில் தளர்ந்தது ஊரடங்கு! – வீதிகளில் மக்கள் நடமாட்டம்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில், ஒரு மாதமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தை இன்று முதல் கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 18 மாவட்டங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு, கம்பஹா,களுத்துறை , புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள, 25 பொலிஸ் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை மறுதினம் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று காலை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தமது அன்றாடப் பணிகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வந்து நடமாட ஆரம்பித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments