இன்று 1958 ஆண்டு வரலாற்றை மீண்டும் கொண்டுவர தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி என்ற அடிமையாட்சியை உருவாக்க துடிப்பதோடு தமிழ்களை தலைகுனிந்து வாழுங்கள் என்ற தொனியில் சில எடுபிடிகளின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இப்படியான அடிவருடிகளின் கருத்துக்களில் இருந்து தமிழர்கள் விடுதலையடையவேண்டும்.
இல்லையேல் தேசியத்தலைவரால் கட்டிப்பாதுகாக்கப்பட்ட மண் வரும் தேர்தலின் பின் அடிமைசாசனத்தின் கீழ் முடக்கப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது.
இதை தடுக்கவேண்டியது தமிழரின் தலையாகிய கடமை என்பதை யாரும் மறக்கக்கூடாது.