நோர்வேயில், புதிய கொரோனா தொற்று பாதிப்பு புள்ளிவிவரங்களில் 10 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் முதலிடம் வகிக்கின்றனர். புதிய சோதனை அளவுகோல்கள் மற்றும் கூடுதல் இலக்கு நோக்கிய சோதனைகள் மூலம் இந்த புதிய புள்ளிவிபரங்கள் பெறப்பட்டதாக FHI கூறியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில், சோதனை செய்யப்பட்டவர்களில் 10-19 மற்றும் 20-29 வயதுக்குட்பட்டவர்களில் முறையே 6.5% மற்றும் 2.6% என கொரோனா தொற்று காணப்பட்டதாக நோர்வேயில் உள்ள கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய வார அறிக்கையில் FHI எழுதியுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, 20-29 வயதுக்குட்பட்டவர்களில் கூடுதல் நோய்த்தொற்றுகள் காணப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த இரண்டு வாரங்களில் 10-19 வயதிற்குட்பட்டவர்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று அறிக்கை மேலும் கூறுகின்றது.