200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ள இலங்கையர்!

You are currently viewing 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ள இலங்கையர்!

நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வர்த்தக வங்கிகள், 10 அடமான நிலையங்கள், 3 பிராந்திய செயலகங்கள் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தி இவ்வாறு நகைகளை அடகு வைத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய பணிகளுக்காகவும், குழந்தைகளின் கல்வி உபகரணங்களை வாங்குவதற்காகவும், உணவு தேவையை நிறைவு செய்வதற்கும் தங்க நகைகளை இவ்வாறு அடகு வைத்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments