200 ஏவுகணைகளை ஸ்ரேலுக்கு ஏவித்தாக்கிய ஈரான்!

You are currently viewing 200 ஏவுகணைகளை ஸ்ரேலுக்கு ஏவித்தாக்கிய ஈரான்!

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி உறுதி என இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மிகப் பெரிய போருக்கான சூழல் உருவாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் பதிலடி உறுதி என அறிவித்துள்ளனர். ஈரானுக்குள் புகுந்து ஹமாஸ் தலைவர் ஒருவரை படுகொலை செய்துள்ள இஸ்ரேல் நிர்வாகத்திற்கு கட்டாயம் பதிலளிக்கப்படும் என்றே அந்த நாடு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா படைகளை குறி வைத்து, லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்துள்ள சம்பவம் ஈரானை தாக்குதலுக்கு தூண்டியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

லெபனான் மீதான படையெடுப்பை பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெறும் ஊடுருவல் என அடையாளப்படுத்த முயன்று வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா ஊடுருவலா படையெடுப்பா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. இஸ்ரேல் தரப்பு தெரிவிக்கையில் சுமார் 200 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவிக்கையில், ஹமாஸ் தலைவரை டெஹ்ரானில் படுகொலை செய்ததும், லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே தாக்குதல் முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தங்கள் படைகள் முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஃபத்தா ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகவும், 90 சதவிகிதம் இலக்கை தாக்கியதாகவும் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் முன்னெடுத்த தாக்குதலை கண்டித்துள்ளது. இதனிடையே, மத்திய கிழக்கு தொடர்பான ஒரு கூட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை கூட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மிகப் பெரிய தவறிழைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதலின் போது ஜெருசலேம் அருகே உள்ள பதுங்கு குழியில் தனது பாதுகாப்பு அமைச்சரவையை நெதன்யாகு சந்திக்கவிருந்தார்.

ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவிக்கையில், இது எங்களது திறனின் ஒரு பகுதி மட்டுமே. ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments