2004 இலேயே நிராகரிக்கப்பட்டவர் சுமந்திரன்! ஆய்வாளர் தகவல்!!

You are currently viewing 2004 இலேயே நிராகரிக்கப்பட்டவர் சுமந்திரன்! ஆய்வாளர் தகவல்!!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது, கூட்டமைப்பில் இடம்பெறக்கூடியவர்களின் பெயர்ப்பட்டியல் தேசியத்தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, அப்பட்டியலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தற்போதைய பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம்.ஏ.சுமந்திரனின் பெயரும் இருந்ததாகவும், எனினும் திரு. சுமந்திரனின் பெயரை தேசியத்தலைமை நிராகரித்திருந்ததாகவும் ஆய்வாளர் திரு. திபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த அவர், அன்றே தமிழ்மக்களாலும், தேசியத்தலைமையாலும் நிராகரிக்கப்பட்ட திரு. சுமந்திரனை, 2009 இன் பின், தேசியப்பட்டியல் மூலமாக திரு. சம்பந்தன் கூட்டமைப்புக்குள் உள்வாங்கிக்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவரது இக்கருத்துக்களிலிருந்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் தமிழ்மக்களினதும், தேசியத்தலைமையினதும் நிராகரிப்புக்கும் மாறாக திரு. சுமந்திரனை உள்வாங்கிக்கொண்டதன் மூலம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டதன் தார்ப்பரியத்தை என்றுமே கவனத்தில் கொண்டிருக்கவில்லையென கருத முடிவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

காணொளி: Thibakaran_About_Sumanthiran_(2004) – 1080WebShareName

(காணொளி உதவி:தமிழ்வின்)

பகிர்ந்துகொள்ள

Leave a Reply