அது 2020 ஆம் ஆண்டை விட மிக கடுமையானதாக இருக்கும் என உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் மிக மோசமான ஆண்டாக மாறியிருக்கிறது 2020. உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டுவிட்டது கண்ணுக்கு தெரியாத வைரஸ். பலரும் வாழ்வாதாரம் இழந்து, உயிரை இழந்து என பல்வேறு இழப்புகள்.
எப்போது 2020ஐ கடப்போம் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், 2021ஆம் ஆண்டு இதைவிட மோசமாக இருக்கும் என உலக உணவுக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுக்கழகத்துக்கு கொடுக்கப்பட்டது.