22 கிலோ கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று(21) கைது செய்யப்பட்டுள்ளார்.
உரும்பிராயைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த நபர் நேற்று (21) மாலை பருத்தித்துறை தும்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.