தற்போதைய தொற்று வீதம் நீடித்தால் ஒன்ராறியோவில் இன்னும் மூன்று வாரங்களில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரிக்கும் என்று, ஒன்ராறியோவின் கொவிட் விஞ்ஞான ஆலோசனை பிரிவு தெரிவித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், மூன்று வாரங்களில் சுமார் 1,300 தொற்றுகளை எதிர்கொள்வோம், என்று ஒன்ராறியோவின் கொவிட் விஞ்ஞான ஆலோசனை பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பீற்றர் ஜூனி தெரிவித்துள்ளார்.
இன்னும் 22 நாட்களில் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை, இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.