பிரித்தானியாவில், கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 260 பேர் “கொரோனா” வுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையிலும் 1019 மரணங்கள் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பப்பட்டிருக்கும் நிலையில், “கொரோனா” தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதில் பிரித்தானியா மிகவும் மந்தகதியிலேயே செயற்பட்டிருந்ததென விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவு செய்யப்பட்ட மரணங்களில் குறிப்பாக 33 வயதுக்கும் 100 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடங்குவதாகவும், அனைவரும் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், மோசமான உடல்நிலையை கொண்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.