2400 கிலோ மஞ்சள் கடத்தல்!இருவர் கைது!

You are currently viewing 2400 கிலோ மஞ்சள் கடத்தல்!இருவர் கைது!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்திச் சென்ற இருவரை மானிப்பாய் சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறீலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பயணித்த வாகனமொன்றை காவல்துறையினர் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இரண்டு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்றுமுற்படுத்த மானிப்பாய் சிறீலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments