திங்கட்கிழமையன்று, 260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்து பாரிய விபத்தொன்றில் 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். நேற்று, அதாவது, ஜூன் மாதம் 10ஆம் திகதி, திங்கட்கிழமையன்று, 260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்துள்ளது.
இந்த துயர சம்பவத்தில், 39 பேர் பலியாகியுள்ளார்கள், 140 பேரைக் காணவில்லை என ஐநாவின் சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பு, எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படகு ஆப்பிரிக்காவிலிருந்து வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், அதில் பயணித்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது தெரியவில்லை.