போர்க்காலத்தில் நடைபெற்ற விடயங்களுக்கான தீர்வு குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை, குற்றவியல் நீதி பற்றி ஒரு வார்த்தை இல்லை. நிலைமாறுகால நீதிக்கு குற்றவியல் நீதித்துறையில் குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குகள் மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.
அது இல்லாவிட்டால் கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் பேசியதெல்லாம் மூடிமறைக்கும் செயற்பாடாக மட்டுமே அமையும். நீங்கள் மறைப்பதற்கே முயற்சிக்கிறீர்கள். இனப்படுகொலை செய்தவர்கள் மீது வழக்குத் தொடராமல், அதை மறைக்கப் பார்க்கிறீர்கள்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தற்போதைய ஜனாதிபதி அவர்கள் போர்க்கால அட்டூழியங்களுக்கு எதிராக ஒரு வழக்கு கூட தொடர முடியாது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதை அவர் பலமுறை பொதுவெளிகளிலும் சொல்லியிருக்கிறார்.
இதனாலேயே நான் இதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
அப்படியானால் வெளிவிவகார அமைச்சர் கூறும் இந்தக் கருத்துக்கள் என்ன?
அவர் உண்மையில் சொல்வது என்னவென்றால், பொறுப்புக்கூறல் இருக்கப்போவதில்லை என்பதையே கூறுகிறார். அது மறைக்கப்படும் என்றே கூறுகிறார். ஆனால் சில ஆணைக்குழுக்கள் மட்டும் இருக்கும் என்றே கூறுகிறார்.
அவர்கள் அழும்படி கேட்கப்படுவார்கள். மக்கள் அழுவார்கள். பின்னர் அவர்கள் கட்டியணைத்து முத்தமிடவேண்டும் என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், இது கவலைக்குரியது.
ஏனெனில் இது முந்தைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியத அதே விடயம்தான்.
இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற்போனோர் அலுவலகம் என்பவை மூடிமறைப்பதற்காகவும், வழக்குத் தொடரப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவுமே அமைக்கப்பட்டதாக அவர் அதை பற்றி பெருமையாக கூறியிருந்தார். .
அவ்வாறு தான் நீங்களும் செய்யப்போகிறீர்களாயின், நீங்கள் ஆட்சிக்கு வரும்போது, அமைப்பு மாற்றம் என்று சொல்லி இருக்க முடியாது என திருமிகு கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நாடாளுமன்ற உரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.