இலங்கையில் கொரோனாத் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்று நாலரை இலட்சத்தை கடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செப்-03) முதல் சுற்று தொற்றாளர்களது எண்ணிக்கை 2780 ஆக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 450,537 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை வரையில் குறித்த ஊரடங்கு நீடிப்புத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கோவிட் செயலணியின் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெலவும் தகவலை உறுதிப்படுத்தியுளள்ளார்.