இராணுவத்தைச் சேர்ந்த 28 பேர் போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க 357 முன்னாள் விடுதலைப்புலிகள் முன்வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.’
இவ்வாறு சாட்சியமளிக்க வந்தவர்களில் விடுதலைப்புலிகளின் தளபதிகளும் அடங்குவதாகவும் அந்தப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்ற ஆதாரங்களை தயாரிப்பதற்காக 12 பேர் கொண்ட பணியாளர் அலுவலகத்தை அமைத்துள்ளது. இவ்வாறு சாட்சியமளிக்க முன்வந்தவர்களின் அடையாளங்களை வெளியிட மனித உரிமை பேரவை தடை விதித்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.