“3ஆம் உலகப்போர் ஏற்படும்” – எச்சரித்த ரஷ்ய பாதுகாப்பு தலைவர்!

You are currently viewing “3ஆம் உலகப்போர் ஏற்படும்” – எச்சரித்த ரஷ்ய பாதுகாப்பு தலைவர்!

போலந்து நேட்டோவில் இணைந்தால் மூன்றாம் உலகப்போர் ஏற்படக்கூடும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை எடுத்ததாக ரஷ்யா கூறி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளாக இந்த மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் போலந்தை குறிப்பிட்டு மூன்றாம் உலகப்போர் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.

அவர் இதுதொடர்பாக கூறுகையில், ‘உக்ரைனில் போலந்து நாட்டின் இராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் காணப்படுவது, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேரடியான போரை ஏற்படுத்த கூடும். நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், மூன்றாம் உலகப்போர் ஏற்படக் கூடும் என நம்புகிறேன்.

போலந்தின் தீங்கு ஏற்படுத்தும் நோக்கங்களில் இருந்து வளரக் கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க, முறையான பதிலடியை தருவதற்கு ரஷ்யாவின் கூட்டணி நாடுகள் தயாராக உள்ளன. ஒட்டுமொத்த உலகுக்கும் பெரிய ஆபத்துக்கான விளைவுகள் ஏற்படக் கூடும்’ என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply